சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்துமுடிந்த இமாச்சல் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. மெத்தம் 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் சட்டசபை தேர்தலில் 44 தொகுதிகளை பாஜக-வும், 21 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் பெற்றனர்.


இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் இமாச்சல் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஜெய்ராம் தாகூர் ஐந்தாவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் முன்பு பாஜக ஆட்சியில் இருந்தபோது முதல்வராக இருந்தவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது!