டெல்லி; பா.ஜ.க-வின் நாடாளுமன்றக் கட்சியின் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மற்றும் எம்.எம். ராஜ்நாத் சிங் வருகை புரிந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசடை தோ்தலில் பா.ஜ.க. அரசு 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள, 182 இடங்களில், 92 இடங்களில் வெற்றி பெற்றால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்பதால், 99 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.க., எந்த சிரமமும் இன்றி தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது. 


இதில், குஜராத்தில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவி பதவியேற்றனர்.


அதேபோன்று, இமாச்சலப்பிரதேசத்தின் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருமான, ஜெய்ராம் தாக்கூர் நேற்று பதவி ஏற்றார்.


இந்த இரு மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அவரை தொடர்ந்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இதைதொடர்ந்து, பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சியின் பாராளுமன்றக் கூட்டத் தொடர் டெல்லியில் இன்று தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள தற்போது பிரதமர் மோடி மற்றும் எம்.எம். ராஜ்நாத் சிங் வருகை புரிந்துள்ளனர்.