BJP மக்களவை அறிக்கையின் @75 வாக்குறுதிகள் பற்றிய முழு விவரம்!!
மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையின் 75 வாக்குறுதிகள் என்னென்ன.....
மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையின் 75 வாக்குறுதிகள் என்னென்ன.....
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர். உறுதிமொழிப் பத்திரம் என பொருள்படும் வகையில், சங்கல்ப பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசத்திற்கு முதன்மை என்ற தலைப்பில் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்பாக துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும், பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலில் சுயசார்பு உறுதிப்படுத்தப்படும், எல்லைகளில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
BJP அறிக்கையில் வெளியிட்டுள்ள 75 வாக்குறுதிகள்:-
> விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.
> 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.
> விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
> விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.
> விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.
> இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.
> விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.
> அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
> சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.
> உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.
> ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.
> கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
> காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
> 2022 ஆம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் 2 மடங்காக உயர்த்தப்படும்.
> முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்கு முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
> நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
> நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
> பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
> 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.
> பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
> மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.
> மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.
> பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.
> தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.
> குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
> அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.
> 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
> 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.
> ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.
> நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
> நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.
> மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.
> நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.
> அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
> பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
> ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு புக்கா வீடு.
> அனைத்து வீடுகளிலும் 100% மின்சாரமயமாக்கல்.
> ஒவ்வொரு குடிமகனும் ஒரு வங்கி கணக்கை அணுகியிருக்க வேண்டும்.
> தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்.
> 175 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன்.
> அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் ODF நிலை.
> ஒவ்வொரு கிராம் பஞ்சாயத்துடன் உயர் வேக ஒளியியல் ஃபைபர் நெட்வொர்க் இணைப்பு.
> சிறந்த விமான இணைப்புக்கு செயல்பாட்டு விமானங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்க இலக்கு.
> துறைமுகத் திறனை அதிகரிக்க 2,500 MTPA.
> 2022 ஆம் ஆண்டில் அனைத்து சாத்தியமான இரயில் தடங்கள் பரந்த பாதைக்கு மாற்றுவது உறுதி.
> 2022 ஆம் ஆண்டளவில் அனைத்து ரயில் தடங்களையும் மின்சாரமயமாக்குவதற்கு அனைத்து முயற்சியும் செய்யப்படும்.
> இந்தியா முழுவதும் ஸ்மார்ட் இரயில் நிலையங்கள் தொடங்கப்படும்.
> அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இலவச Wi-Fi வசதி இணைப்பு.
> 2022 ஆம் ஆண்டிற்குள் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை திட்டத்ம் நிறைவு.
> ஆயுஷ்மன் திடத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை நிறுவுதல்.
> 75 புதிய மருத்துவ கல்லூரிகள் / முதுகலை மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும்.
> காச நோய்களில் கடுமையான தாக்கத்தை குறைக்க தேவையான ஏற்பாடுகள் உறுதி.
> மருத்துவர்-மக்கள் விகிதத்தை 1: 1400 என்ற விகிதத்தில் அதிகரிப்பு!!
> போஷான் அபிஷான் திட்டந்த்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதோடு ஊட்டச்சத்து குறைப்பு விகிதத்தை விரைவுபடுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.
> மொத்த ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்கும் பணி.
> ஒரு நிலையான வரி விதிப்பு முறையை உறுதிப்படுத்தும் வேலை.
> முழுமையான டிஜிட்டல் மற்றும் நீதிமன்றங்களின் நவீனமயமாக்கல்.
> டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு முழு ஆதரவு.
> அரசாங்க சேவைகள் டிஜிட்டல் விநியோகத்தை இயக்கும் என விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பன உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.