கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்கி வருவதால், இது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது இந்த புதிய வகை வைரஸ் காரணமாக  தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தியா முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சை தொற்றும் வேகமாக பரவுகிறது என எய்ம்ஸ் தலைவர் Dr Randeep Guleria  தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பலரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.


Mucormycosis அதாவது கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
கருப்பு பூஞ்சையின் மருத்துவ பெயர் ம்யோகோர் மைகோஸிஸ். இது ஒரு அரிய மற்றும் ஆபத்தான பூஞ்சை தொற்று ஆகும்.  இந்த தொற்று பெரும்பாலும் உடலில் உள்ள சைனஸ்கள், நுரையீரல், தோல் மற்றும் மூளையைத் தாக்குகிறது.


கொரோனாவுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் என்ன தொடர்பு?
கோவிட் -19 (COVID-19) நமது நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் பலவீனப்படுத்துகிறது. இதனுடன், கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதனால், கோவிட் -19 நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கருப்பு பூஞ்சைக்கு காரணமான நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராட முடியவில்லை.


கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்: அதற்கான அறிகுறிகள்:
- கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
- அடிக்கடி காய்ச்சல்
- தலையில் கடுமையான வலி
- சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
- இரத்த வாந்தி
- மன நிலையில் மாற்றம் 


கருப்பு பூஞ்சை ஆபத்து உள்ளவர்கள் யார்?
எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் நோயாளிகள்
புற்றுநோயாளிகள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
வெள்ளை இரத்த அணுக்கள் குறைவாக உள்ளவர்கள்
நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்


ALSO READ | கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?