மத்திய பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை `ப்ளூவேல்`!
ப்ளூவேல் விளையாட்டின் அடுத்த பிடியில் மத்தியப் பிரதேச மாநில மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தமோ என்னும் இடத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவரின் பெயர் சாத்விக் பாண்டே எனவும், அவர் சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என முன்னதாக அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மாணவரை காவல்துறை தேடி வந்துள்ளனர். அப்போது ரயில்வே டிராக்கில் மாணவர் ஒருவர் அடிபட்டு இறந்ததுள்ளதாக வெளிவாத தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரயிலில் அடிபட்டு இறந்தது சாத்விக் பாண்டே என உறுதி செய்தனர்.
ப்ளூவேல் விளையாட்டால் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் பலியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?
ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.
இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது.