பள்ளி மாணவிகளுக்கு ஆரோகியமான இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை வழங்கிய BMC. அதை, அகற்றும் திட்டத்தை கொண்டுவரவில்லை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரஹான்மும்பை நகராட்சி கார்ப்பரேஷன் (BMC) 6 ஆம் வகுப்பு முதல் முதல் 10 ஆம் வகுப்பு பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கி வருகிறது. இப்படி, நல்ல செயல்முறைகள் ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் அதன் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் இல்லை என குற்றங்கள் எழுந்துள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 


தற்போதைய முன்மொழிவின்படி, பள்ளிகளில் கோடை விடுமுறையின் இரண்டு மாதங்களில் தவிர, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் பெண்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக எட்டு சானிடரி நாப்கின் பெறுவார்கள். இதற்காக BMC மூன்று ஆண்டுகளுக்கு ரூ.9 கோடி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளது.


இது குறித்து கூடுதல் ஆணையர் இட்ஜேஸ் குண்டன் கூறுகையில், 47,084 பெண்கள் பயனடைவர் என்று ஸ்டாண்டிங் கமிட்டியில் தெரிவித்தனர். துவக்கத்தில் இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்த கழிவுகளை அகற்றும் முறை இல்லை. அன்று முதல் இன்றும் வரை எந்தவொரு அகற்றும் முறையும் இல்லை என்பதை ஆணையர் இட்ஜேஸ் குண்டன் ஒப்புக்கொடுள்ளார். 


"சானிடரி நாப்கின் கழிவுகளால் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த சிக்கல்களை நீண்ட காலத்திற்கு கூறிவருகிறோம். தேசிய பசுமை ட்ரிப்யூன் மற்றும் RTP ஆகியோருடன் சமோவா மனு ஒன்றை தாக்கல் செய்யுமாறு சரோட் பரிந்துரைக்கிறார். ஆதாரமின்மை காரணமாக இந்த வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது, "என்று சுப்பிரமணிய சோனார் கூறினார்.