CBSE பள்ளிகளில் 12, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் மார்ச் 20ம் தேதியில் முடிவடைகிறது.


அந்தகையில் 137 வகையான பாடப்பிரிவுகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடக்கிறது.




கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.