பாலிவுட் நடிகை ஆலியாபட் தனக்கு Attention-Deficit Hyperactivity Disorder (ADHD) என்ற நோய் இருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது உடலில் ஏற்படும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை, இது ஒருவகையான கவனக்குறைவு கோளாறாகும். இந்த நோய் உள்ளவர்களால் ஒரு விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. 40 முதல் 50 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். தகவல்களை நினைவில் கொள்வது, வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றில் சிரமம் ஏற்படும். ADHD நீண்ட காலத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சனை ஆகும். மனக்கிளர்ச்சி, அதிவேகத்தன்மை மற்றும் கவனக்குறைவு என ADHD மூன்று வகையான அறிகுறிகளைக் கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சல்மான் கானுக்கு உதவினால் கொல்லப்படுவார்கள்! மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!


ADHD பிரச்சனை கொண்டவர்கள் ஒரே விஷயத்தில் கவனத்தைத் செலுத்துவது, வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது, குறிப்பிட்ட செயல்களில் கவனம் செலுத்துவது, நேர மேலாண்மையை கடைபிடிப்பது போன்றவற்றில் சிரமப்படுகிறார்கள். மேலும் இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் அவர்களது அன்றாட பணிகளை பாதிக்கிறது. கல்லூரியில் படிப்பதில் கவனம் செலுத்த முடியாமல், வேலையில் கவனம் செலுத்த முடியாமல், குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சின்னச் சின்ன வேலைகளை கூட முடிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகலாம். மேலும் தூங்குவதில் கூட பிரச்சனைகள் ஏற்படலாம்.



இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது?


ADHD ஒரு வாழ்நாள் நோயாக இருந்தாலும் சில வழிகள் மூலம் இதனை சரி செய்யலாம். வேலையில் அதிக கவனமுடனும், தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் திறம்பட செயல்படலாம். ஒரு சிலருக்கு மருந்துகள் தேவைப்படும், ​​மற்றவர்களுக்கு சில செயல்கள் மூலம் சரி செய்யலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ADHD பற்றிய முழு விவரங்களை வழங்குகின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்த பிரச்சனைக்கு தாங்கள் காரணம் இல்லை என்பதை புரிந்து கொள்கின்றனர். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பணிகளில் அதிக கவனம் செலுத்த ஒரு வேலையை குறிப்பிட்ட நிமிடத்தில் முடிக்க கற்று கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை பராமரிக்க முடியும்.


மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பணிச்சூழலை மாற்றுவதன் மூலம் சரி செய்யலாம். எடுத்துக்காட்டாக, அவரின் அலுவலகத்தில் அதிக சப்தமான இடத்தில் வேலைகளை செய்து வந்தால், அந்த இடத்தில் இருந்து அமைதியான இடத்திற்கு மாறலாம். எந்தவித தொந்தரவும் இல்லாமலும், ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் கவனச்சிதறல்களை குறைக்கலாம். எந்த ஒரு கடினமான பணியை முடித்த பிறகும் சிறிது நேரம் இடைவெளி எடுப்பது கூடுதலாக உதவுகிறது. மருந்துகள் இல்லாமல் இது போன்ற செயல்பாடுகள் மூலம் ADHD பிரச்சனையை சரி செய்ய முடியும்.


மேலும் படிக்க | பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ