மாயாவதியை இழிவுபடுத்தி பேசிய தயாசங்கர் சிங் கைது
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை விலைமாதுடன் ஒப்பிட்டு பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் பேசினார். இவ்விவகராம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியதையடுத்து, உத்தர பிரதேச மாநில பாஜக துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடை நீக்கமும் செய்யப்பட்டார்.
தயாசங்கர் சிங்கிற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் தயாசங்கர் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதையடுத்து தயாசங்கர் சிங் தலைமறைவானார்.
இதனால் அண்டை மாநிலமான பீகார் போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஒருவாரமாக போலீசார் தயாசங்கர் சிங்கை தேடி வந்த நிலையில், பீகார் மாநிலம் பக்ஸர் என்ற இடத்தில் வைத்து அவரை இன்று உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநில போலீசார் கைது செய்தனர்.