தனக்கு அரசியல் கற்றுத்தந்தவரை தூக்கி எறிந்தவர் மோடி -ராகுல் தாக்கு!
தனது ஆசான் எல் கே அத்வானியை முகத்தில் குத்தியவர் பிரதமர் என்னும் பாக்ஸ்ர மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
தனது ஆசான் எல் கே அத்வானியை முகத்தில் குத்தியவர் பிரதமர் என்னும் பாக்ஸ்ர மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் காரசாரமாக நடைப்பெற்று வரும் வேளையில்., அரசியல் கட்சி தலைவர்கள் மற்ற தலைவர்களை விமர்சிக்க மறப்பதில்லை. அந்த வகையில் இன்று ஹரியானா மாநிலம் பிவானி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி தனது ஆசானையே முகத்தில் குத்தியவர் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி என்னும் பாக்ஸர்., வருமையை குத்தி தள்ளுவதற்கு பதிலாக, வேலையின்மையை குத்தி தள்ளுவதற்கு பதிலாக அவரது ஆசான் எல் கே அத்வானியை முகத்தில் குத்தி வெளியே தள்ளியுள்ளார். இதற்காகவே தனக்கு ஆதரவாய் ஒரு அணியையும் அவர் உருவாக்கியுள்ளார் என ராகுல் கடுமையாக பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
பிரதமர் மோடி தனது அரசியல் குருவான எல் கே அத்வானியை அடிக்கடி அவமத்தி வருவதாக கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் விழா மேடையில் வைத்து அத்வானி அவர்களை பிரதமர் மோடி அவமதித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையத் தொடர்ந்து எதிர்கட்சிகள் தங்களது கட்சி கூட்டத்தின் போது எல்லாம் இந்நிகழ்வை மேற்கொள்காட்டி பிரச்சாரம் செய்ய மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., ஹிந்து கலாச்சாரத்தில் ஆசியர்கள் என்பவர்கள் பெரிதும் போற்றப்படுபவர்கள். ஆனால் ஹிந்துதுவத்தை பேசி வரும் நமது பிரதமருக்கு மட்டும் அது தெரியவில்லை. தனது ஆசானை அவமதிக்கும் முன்று ஒன்றுக்கு இரண்டு முறை அவர் சிந்தித்திருக்க வேண்டாமா? எனவும் கேள்வி எழுப்பினார். அரசியல் நுனுக்கங்களை தனக்கு கற்றுகொடுத்த தலைவரின் முன்பு கைகூப்பி வணங்க கூட மறுக்கும் மரியாதைக்குறிய மாணவர் தான் நமர் பிரதமர் எனவும் கடுமையாக விமர்சித்தார்.
எதிர்கட்சி தலைவர்கள் மட்டும் அல்ல., சமீபத்தில் பாஜக-வில் இருந்து பிரிந்த சத்ருகன் சின்ஹா கூட எல் கே அத்வானிக்கு பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் வாய்ப்பளிக்காததை சுட்டி காட்டி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.