உள்நாட்டின் BrahMos INS சென்னையிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது..!!!
இன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இந்திய போர் கப்பல் சென்னையிலிருந்து (INS Chennai) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புதுடெல்லி: இந்திய கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கபட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை சென்னையில் இந்திய போர் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது எதிர் நாட்டின் ராடாரில் சிக்காத வகையிலான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
அரேபிய கடலில் ஒரு இலக்கைத் மிக துல்லியமாக தாக்கிய ஏவுகணை, போர் காலங்களில் மிக முக்கிய ஆயுதமாக திகழும்
இந்த வெற்றிகரமான பரிசோதனைக்காக, டிஆர்டிஓ (DRDO), பிரம்மோஸ் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் , பிரம்மோஸ், இந்திய கடற்படை மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் அனைத்து பணியாளர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், பிரம்மோஸ் ஏவுகணைகள் பல வழிகளில் இந்திய ஆயுதப்படைகளின் திறன்களை அதிகரிக்கும் என்றார்.
இந்தியா கடந்த சில நாட்களாக பல ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 30 அன்று ஒடிசாவின் பாலசூரில் ஒஇருந்து ஒரு உள்நாட்டு ஏர்ஃப்ரேம் மற்றும் பூஸ்டருடன் 400 கிமீ சென்று தாக்கவல்ல பிரீமியம் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட பின்னர் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை முதலில் 290 கி.மீ தூரத்தில் சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது
இந்த வெற்றிகரமான பரிசோதனை மூலம் இந்தியா, அடுத்த தலைமுறை நீண்ட தூர, அதி நவீன, சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை தயாரிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு செல்லும்
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், லடாக் Ladakh மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் ((LAC) வழியாக பல மூலோபாய இடங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் பிற முக்கிய ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று ஒடிசா கடற்கரையில் ஒரு பாதுகாப்பு நிலையத்திலிருந்து அணு ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடிய ஷவுரியா ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
நில பரப்பில் இருந்து, நிலப்பரப்பை தாக்கும் ஏவுகணையான் இது சுமார் 800 கி.மீ தூரத்தில் இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. இதனை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.
அக்டோபர் 9 ஆம் தேதி, கிழக்கு கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தில் இருந்து ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
DRDO உருவாக்க்கிய இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (IAF) போர் விமானங்களின் திறனை பெருமளவு கூட்டியுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR