டெல்லி: மத்திய டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை குண்டுவெடிப்பு நடந்ததாக டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தூதரக கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையில் குண்டு வெடித்ததாகவும், அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து கார்களின் விண்ட்ஸ்கிரீன்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குண்டு வெடிப்பு (Bomb Blast) காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த இடத்தில் காவல்துறையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்துல் கலாம் சாலை முழுதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


விஜய் சௌக்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது, அங்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவிற்காக கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: டிராக்டர் பேரணி வன்முறை: Shashi Tharoor, 6 மூத்த பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு


கட்டிடத்திற்கு வெளியே டெல்லி காவல்துறை அதிகள் நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும், சாலையின் ஓரங்களையும் பிற இடங்களையும் காவல்துறையினர் பரிசோதித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிகின்றன. 


டெல்லியில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டின் தலைநகரில் பதட்டத்தையும் பரபரப்பையும் அதிகரித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர்தான், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை காரணமாக டெல்லி மக்கள் பீதிக்கும் அச்சத்துக்கும் ஆளானார்கள். இன்று இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிலைமையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. 


குண்டு வெடிப்பு குறித்த அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ALSO READ: போராட்டத்திற்கு எதிராக போராட்டம்... தில்லியில், போராட்டக்காரர்களை விரட்டும் உள்ளூர் மக்கள்..!!! 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR