சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, அவரை தனது அமைச்சரவையில் இருந்து இன்று நீக்கினார். அதாவது பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் ஒரு சதவீத கமிஷன் கோரியதாகக் கூறப்படுகிறது. அவர் மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவரை பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், ஊழல் தடுப்பு பிரிவு சிங்லாவை கைது செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் "ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஏற்ப இந்த பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா கூறுகையில், பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் பகவந்த் மான்னின் முடிவைப் பாராட்டினார். தனது கட்சிக்கு மட்டுமே நேர்மையும் தைரியமும் உள்ளது. யார் ஊழல் செய்தாலும், சொந்தக்கட்சியை சேர்ந்த தலைவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக வீடியோ மூலம் பேசிய முதல்வர், "ஊழல் செய்யும் அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்கிறேன். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். என்றார். விஜய் சிங்லா தவறு செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். 


மேலும் படிக்க: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு


இந்த கடுமையான நடவடிக்கைக்குப் பிறகு, பகவந்த் மான், "மாநிலத்தில் ஒரு சதவீத ஊழலைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாது. மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது நமது கடமை" எனக் கூறினார்.


மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், தாய்நாட்டை நேசிக்கும் மகனாக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கும் வரை, நாட்டை காக்கும் ராணுவ வீரரை போல பகவந்த் மான்கள் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான மாபெரும் போரை தொடர்வார்கள். ஊழலுக்கு கூட இங்கு இடமில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்திருக்கிறார். நாம் அனைவரும் அவருடைய வீரர்கள். ஊழலை ஒழிப்போம் எனக் கூறினார்.


மேலும் படிக்க: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை.. 34 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் தண்டனை


2015-ம் ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் தனது அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்த நிலையில், இரண்டாவது முறையாக இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.


பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பகவந்த் மான் மாநில முதல்வரானார். ஆம் ஆத்மி கட்சியும் பகவந்த் மான் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநிலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி - பாஜக இடையே வெடிக்கும் மோதல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR