குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடியரசு துணைத் தலைவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.



ஹைதராபாத்தில் உள்ள துணை குடியரசுத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவுக்கு, இன்று கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


எனவே, அவர் ஒரு வாரம் சுய தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று குடியரசுத் துணைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


இந்தியாவில் 3.33 லட்சத்துக்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் (Corona virus) பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் சமூகப் பரவல் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பல நகரங்களில் கொரோனாவல் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்கிறது.


மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்களால் கூட்டாகத் தொடங்கப்பட்ட  அரசு அமைப்பான INSACOG, ஓமிக்ரானின் தொற்று துணை வகையான  BA.2  வகை தொற்று நாட்டில் கணிசமான அளவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கொரோனா பாதிப்பு; வீட்டு தனிமையில் நடிகை குஷ்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR