பிரிக்ஸ்: பிரதமர் கோரிக்கை ஏற்பு - பயங்கரவாதத்தை ஒடுக்க முடிவு!!
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
இதனை அடுத்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பயங்கரவாதம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கேள்வி எதையும் எழுப்பாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.