நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. உலகமே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பாராட்டும்போது, இங்கு இருக்கும் சில எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்களின் பேச்சுகள் பாகிஸ்தானுக்கு உதவியாக உள்ளது. இந்த தாக்குதலில் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பல விளைவுகளை பயங்கரவாதிகள் சந்தித்து இருப்பார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் சுயநலத்தால் நாடு தான் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரபேல் போர் விமானங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பதிலடி தந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மார்ச் 2 ஆம் தேதி அன்று நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார். அப்படியெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் ஒரு ரபேல் விமானத்தையும் வாங்கி விமானப்படையில் சேர்க்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு விசியத்தில் பாஜக ஏன் ஒரு இரட்டை வேடம் போடுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.