நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளா MLA அதிரடி நீக்கம்...
கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாயாவதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்குவதாக மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் சச்சரவுகளுக்கு இடையில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது.
முன்னதாக கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 MLA-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும் 2 சுயேட்சை MLA-க்களும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு MLA நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார்.
17 MLA-க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101-ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், இன்று சட்டசபை கூடியது.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு MLA நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாயாவதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மகேஷ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
கூட்டத்தின் போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகளும். அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வதாக அறிவிக்கப்பட்டது. குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததால், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.