2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்தார். அந்தவகையில் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.


 



 


அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் ஆவணங்களை நிர்மலா சீதாராமன் எடுத்து சென்றார்.