பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான (Union Budget 2021) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman), இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் (Digital Budget) செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. 


மத்திய பட்ஜெட்டில் 2021 நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சித்தர்மன் அறிவித்தார். மொத்தத்தில், ரயில்வேக்கு இந்த நிதியாண்டில் ரூ. 1.07 லட்சம் கோடி நிதி மூலதன செலவினங்களுக்காக இருக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  2030 ஆம் ஆண்டளவில் எதிர்காலத்தில் தயாராக இருக்கும் இந்திய ரயில்வேக்கான புதிய ரயில் திட்டத்தையும் சீதாராமன் வெளியிட்டார். கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிப்பு சரக்கு தாழ்வாரங்கள் ஜூன் 2022-க்குள் இயக்கப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.


ALSO READ | நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு - FM நிர்மலா சீதாராமன்!


நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள்:- 


- நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்


- பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை. 


- அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு. 


- காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு 49% இருந்து 74% ஆக உயர்த்தப்படுகிறது. 


- எல்.ஐ.சி. பங்குகளை விற்க திட்டம்; 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்;  பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும். 


- பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். 


- சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். 


டிஜிட்டல் முறையில் மக்க்கள் தொகை கணக்கெடுப்பு பணி- ரூ 9,768 கோடி நிதி ஒதுக்கீடு. டிஜிட்டல் பண பரிவர்த்தனையயை ஊக்குவிக்க ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு. தேசிய மொழிகளை மொழிபெயர்ர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR