நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் வகையில், பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உள்ளது என்று  குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம்  என தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கமும் இதில் அடங்கும். பெண்களை பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற ஊக்குவிக்கப்படும். பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய தொழிலை செய்து வருபவர்கள் விஸ்வகர்மா என்ற பெயரால் அழைக்கப்படுவார்கள். முதன்முறையாக அவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. MSME சங்கிலியுடன் அவர்களை ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 சர்வதேச திறன் மையம்


நாட்டில் உள்ள 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். நாட்டின் இளம் தலைமுறையினருக்கு திறன் பயிற்சிக்காக PMKVY 4.0 தொடங்கப்படும். இதில், AI, Robotics, Coding போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்த, 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு உதவி வழங்கப்படும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 30 சர்வதேச திறன் மையங்கள் அமைக்கப்படும். ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட வைரங்களை ஊக்குவிக்க ஐஐடிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். ஒருங்கிணைந்த டிஜிட்டல் இந்தியா பிளாட்ஃபார்ம் அமைப்பதன் மூலம் திறன் மேம்பாடு வேகமெடுக்கும். இளைஞர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சித் திட்டம் தொடங்கப்படும்.


சுற்றுலா மேம்பாடு


சுற்றுலாவை மேம்படுத்த, தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும் ஒரு செயலி உருவாக்கப்படும். தேகோ அப்னா தேஷ் முயற்சியின் கீழ், நாட்டிற்குள் சுற்றுலாத்துறை அதிகரிக்கப்படும். ஸ்வதேஷ் தர்ஷன் திட்டமும் செயல்படுத்தப்படும். பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தும் வகையில் தொடங்கப்படும். 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள் புனரமைக்கப்படும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் புதிய நிதி


வேளாண் தொடக்கங்களை ஊக்குவிக்க வேளாண் ஊக்க நிதி அமைக்கப்படும். விவசாயத்தின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு திறந்த மூலமாகவும், திறந்த தரமாகவும், ஒன்றுக்கொன்று இயங்கக்கூடிய பொது நன்மையாகவும் கட்டமைக்கப்படும். பட்ஜெட் விவசாயிகளை மையமாகக் கொண்ட தீர்வுகளை செயல்படுத்தும். இது விவசாயத்திற்கான சந்தை தகவல் அணுகலை மேம்படுத்தவும், விவசாய தொழில் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கான ஆதரவை மேம்படுத்தவும் உதவும்.


மேலும் படிக்க | பட்ஜெட் கூட்டத்தொடரின் ஜனாதிபதி உரைக்கு ராகுல் காந்தி ஏன் வரவில்லை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ