மத்திய பட்ஜெட் 2023: இந்த முறை நிதியமைச்சர் பல்வேறு துறை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்பவர் முதல் விவசாயிகள் வரை அனைவரும் பட்ஜெட் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த சில பட்ஜெட்டுகளை நினைவுகூர்ந்து, ரயில்வேயை மனதில் வைத்து அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடும். இவ்வாறான நிலையில் இம்முறை ரயில்வே பயணிகள் நிதியமைச்சர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதன்படி ரயில் கட்டணத்தில் சலுகை கோரி கடந்த ஓராண்டாக ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை, நிதியமைச்சர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.41,000 கோடி கூடுதல் வருவாய்
உண்மையில், ரயில்வே அமைச்சகம் கடந்த காலத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் ரயில்வே உச்சகட்டத்தில் சம்பாதித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் ஜனவரி வரை ஆண்டு அடிப்படையில் ரூ.41,000 கோடி கூடுதல் வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது. கடந்த மாதம் ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் ரூ.1,91,162 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது. ஓராண்டுக்கு முன் இதே காலத்தில், இந்த எண்ணிக்கை ரூ.1,48,970 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022-23ஆம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.2,35,000 கோடி என்ற எதிர்பார்ப்புடன் ரயில்வே இயங்குகி வருகின்றது.


மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


ரயில் கட்டணத்தில் தள்ளுபடி மீண்டும் தொடங்குமா?
இதற்கிடையில் கடந்த நாட்களில், இதுபோன்ற புள்ளிவிவரங்கள் ரயில்வேயால் இரண்டு முறை முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வருவாய் அதிகரிப்புடன், மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட விலக்குகளை ரயில்வே திரும்பப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனாவிற்கு முன்பு கிடைத்த சலுகை
கொரோனாவுக்கு முன், இந்திய ரயில்வே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணத்தில் 40 சதவீத தள்ளுபடியை வழங்கியது. அதே நேரத்தில், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது. ரயில்வேயில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் சராசரியாக 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் தீவிர நோயாளிகளுக்கும் ரயில்வே சலுகை அளிக்கிறது.


மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ