Budget 2023: டாப் 5 எதிர்பார்ப்புகள், நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
Budget 2023 Expectations: அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய முழுமையான பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய முழுமையான பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நிலைமை தற்போது சீராகி வருவதால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.
கோவிட்-19 தொற்றுநோயால் கடந்த சுமார் இரு ஆண்டுகளில் இருந்த மந்த நிலைக்குப் பிறகு பொருளாதாரத்தை விரைவான பாதையில் எடுத்துச்செல்ல, உள்கட்டமைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் முக்கிய அறிவிப்புகளை தொழில்துறை எதிர்பார்க்கும். மற்றொரு புறம், நடுத்தர வர்க்கம் வரி தளர்வுகளில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் விலக்கு வரம்புகளின் கீழ் கடைசியாக 2014-15 நிதியாண்டில் (FY 2014-15) மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது புதிய மற்றும் பழைய வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ₹ 2.5 லட்சம் ஆகும். இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இந்த வரம்பில் மாற்றம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர வேறு சில கனவுகளோடும் சாமானியர்களும், பல்வேறு தொழில்துறையும் காத்திருக்கின்றன.
வரவிருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்:
வருமான வரி விலக்கு
வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டால், செலவு செய்வதற்கான அதிக ரொக்கத் தொகை மக்களிடம் இருக்கும். இது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொது நுகர்வில் ஏற்பட்ட மந்தநிலையை சரிசெய்ய உதவி நாட்டில் உருவான பொருளாதார மந்தநிலையிலிருந்தும் மீள உதவும்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த பங்குகளின் முதலீடு செய்தால் இலாபம்!
தற்போதைய வரி அடுக்கின்படி, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு எந்த வரியும் கிடையாது. அதேசமயம் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 5 சதவீதம் வரி கழிக்கப்படலாம். இருப்பினும், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால், விலக்கு சிறியதாகத் தெரிகிறது. வரி விலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்த பட்ஜெடில் உள்ள முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
சிறு வணிகங்களுக்கான குறைந்த விலை கடன்
நடுத்தர மற்றும் சிறு வணிகங்களுக்கு குறைந்த விலை கடன் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEகள்) மிக மோசமாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி இந்த சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் செயல்திறனை நம்பியிருப்பதால், இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள MSMEகளின் எதிர்காலத்தை மாற்றும். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான அறிவிப்புகள் வரும் என காத்திருக்கிறார்கள்.
வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு
தற்போது, தனிநபர் ஒருவர் சுயமாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்கான வீட்டுக் கடனில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு கோரலாம். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வரும் சொத்து விலைகள் காரணமாகவும் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க இந்த வரம்பை மேலும் 1 லட்சம் ரூபாய் வரை நீட்டித்து அரசாங்கம் அறிவிக்கலாம். இந்த விலக்கு ரியல் எஸ்டேட் துறையின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
மாற்று ஆற்றலில் (அல்டர்னேடிவ் எனர்ஜி) கவனம்
ஆற்றல் மாற்றுக்கான வழிகளை உலகம் ஆராய்ந்து வருகிறது. மின்சார வாகனங்கள் முதல் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் வரை மற்றும் இன்னும் பல விஷயங்களில் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. மாற்று எரிசக்தி விருப்பங்களில் பணிபுரியும் வணிகத்தை ஊக்குவிக்க வரி விலக்கு மற்றும் பிற நன்மைகளை அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கலாம்.
உள்கட்டமைப்பு திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு
பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை உயர்த்தி அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடந்த காலப் போக்கின் அடிப்படையில், ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். சிறந்த இணைப்பை உறுதி செய்து, அதன் மூலம் வணிகங்களை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | Budget 2023: அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவில் இருந்து நிவாரணம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ