புதுடெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் பார்லிமெண்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் துவங்கும். பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. 


தற்போது இந்த முறை இது மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று பார்லிமெண்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். 


மசோதாவின் முழு அமர்வின் போது மத்திய பட்ஜெட் 2017 தவிர 34 பில் எடுக்கப்பட்டுள்ளன. 


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பார்லிமெண்டை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.