மேற்குவங்கத்தில் ஏழு உயிர்களை பறித்த பேருந்து விபத்து!!
மேற்குவங்கத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளகியத்தில் 7 பேர் பலி.
மேற்குவங்கம் மாநிலத்தில் பெல்டாங்கா பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெல்டாங்காவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இவ்விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை.