இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பாஜக தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் கூட்டணி அமைத்து தற்போது 3வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. 2019 தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வாக்குகளை பெற்று இருந்தது. இருப்பினும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில் ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் சறுக்கலை சந்தித்த பாஜக இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை...' மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?


13 தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள்


மேற்கு வங்கத்தில் உள்ள 4 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 3 தொகுதிகள், உத்தரகண்டில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் பீகார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் தலா 1 தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளியான தகவலின்படி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, டிஎம்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. அதே சமயம் பாஜக ஒரு இடத்திலும், ஜேடியு ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. ஹிமாச்சலத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும், உத்தரகாண்டில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 4 இடங்களில் 3 இடத்தில் திரினாமுல் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், பீகாரில் ஜேடியு முன்னிலையில் உள்ளது.


எதற்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது?


உத்தரகாண்ட்டில் உள்ள மங்களூர் மற்றும் பத்ரிநாத் ஆகிய சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மங்களூரில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மரணம் அடைந்தார். பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ய இந்த இரண்டு இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டேரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு என்னைகை நடைபெற்று வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


மேற்கு வங்கத்தில் உள்ள மணிக்தலா, பாக்தா, ரனாகாட் தக்ஷின் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. கட்சி தாவியதால் இந்த பகுதிகளில் உள்ள எம்எல்ஏகளின் பதவி பறிக்கப்பட்டது.


பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏ பாஜகவில் இணைந்ததை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பீகாரில் உள்ள ருபாலி சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ ராஜினாமா செய்த பின்னர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


மேலும் படிக்க | Vikravandi bypoll: விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை! முன்னிலையில் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ