பைஜூவின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரன் இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களில் ஒருவரானார் வலம் வருகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, தொடர்ச்சியான புதிய முதலீடுகள் இந்திய ஆன்லைன் பயிற்சி தொடக்க பைஜுவின் பில்லியனர் கிளப்பில் நிறுவனர் பைஜு ரவீந்திரன் இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களில் ஒருவர் என தெரிவித்துள்ளது. 


கேரள மாநிலம் அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த  37 வயதுடைய ரவீந்திரன். பொறியியல் படித்துவிட்டு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் 2011ஆம் ஆண்டு திங்க் லேர்ன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன்மூலம் இணையதளத்தில் பயிற்சியளிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இவர் பைஜூ'ஸ் என்ற செயலியை அறிமுக செய்தார்.


இந்தச் செயலியின் மூலம் LKG முதல் 12 வகுப்பு வரையான பாடத் திட்டங்களுக்கு எளிதாக செயல்முறை விளக்கம் ஆகியவற்றை தர ஆரம்பித்தனர். அத்துடன் பல போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாடத் திட்டங்கள் குறித்தும் இந்தத் தளத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் செயலிக்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.


பெங்களூரில் 2015 இல் தொடங்கப்பட்ட பைஜூவின் மதிப்பீடு சுமார் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியுள்ளது. ரவீந்திரன் நிறுவனத்தில் 21 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். இதனால் இந்தியாவின் இளைய பில்லியனர்களில் ஒருவரானார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக பைஜூ'ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.