முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லாவிட்டால் டெல்லி காவல்துறையினர் அபராதம் விதிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் பேரில், போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் என பல்வேறு விதிமீறல்களுக்கு பன்மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் தற்போது டெல்லியிலும் வாகனசோதனை நடைபெற்று வருகிறது. அதில் காவல்துறை அதிகாரிகள் கார்களை சோதனை செய்யும்போது அதிலுள்ள முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் விதிப்பதாக கார் ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



ஆணுறை பாதுகாப்பான உடலுறவுக்கு பயன்படுகிறது என்ற போதிலும், கார்களின் குழாய்களில் திடீரென வெடிப்பு ஏற்பட்டால் கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்துவதால், ஆணுறைகளை முதலுதவி பெட்டியில் வைத்திருப்பது அவசியம் என அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும், ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரத்தகசிவை நிறுத்தவும் ஆணுறை பயன்படுகிறது என கூறப்படுகிறது. 


இதுகுறித்து டெல்லி வாகன ஓட்டிகள், முதலுதவி பெட்டியில் ஆணுறை வைப்பது அவசியம் என தெரிவிக்கின்றனர், வைத்திருக்காவிடில் பன்மடங்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் ஆணுறையின் பயன்பாடுகள் குறித்து போக்குவரத்து காவலர்களிடன் கேட்டால், அவர்களுக்கு தெரியவில்லை. பதில் தெரியாமல் சிரிக்கிறார்கள் என வேதணை தெரிவித்துள்ளனர்.