விலைமகள் என திட்டிய கணவனை மனைவி கொலை செய்ததது, கொலை ஆகாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊட்டியில் கடந்த 2002 ஆம் ஆண்டு கணவரைக் கொலை செய்து எரித்த வழக்கில் மனைவியும், அவரின் கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து, ``தனக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகமாக இருப்பதால் அதைக் குறைக்க வேண்டும்" என அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 


இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்திய போது, ``வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் என்னையும், என் மகளையும் கணவர் விலைமாதர் என கூறினார். அந்த வார்த்தை ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் அவரைக் கொலை செய்தேன்" என அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  


இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.எம். ஷந்தா நாகூடர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு சமீபத்தில் வழங்கியது. அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ``இந்திய சமுதாயத்தில் எந்தப் பெண்ணும் தன் கணவர் போன்ற ஒருவரிடமிருந்து இப்படியான ஒரு வார்த்தைகளைக் கேட்க விரும்ப மாட்டார். கணவனே மனைவியைக் குறிப்பாக மகளையும் விலை மாதர் எனக் கூறுவதை எந்த ஒரு இந்தியப் பெண்ணும் விரும்பமாட்டார். கணவர் கூறிய அந்த வார்த்தைதான் அவரைக் கொலை செய்யும் அளவுக்கு மனைவியைத் தூண்டியுள்ளது. 


மேலும், இது கடுமையான ஆத்திரமூட்டல் நிகழ்வுதான். எனவே இந்த நிகழ்வை கொலையாக கருத முடியாது, மரணம் விளைவிக்கக்கூடிய குற்றமாகவே கருத முடியும்" என உத்தரவிட்டதுடன் அந்தப் பெண்ணின் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.