புது தில்லி / ஐக்கிய நாடுகள்: அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (UNSC) குழுவானது, ஜெய்ஷ்-இ-முகமது தலைவரான மசூத் அஸ்ஸரை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 40_வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் குழுவானது பயங்கரவாதுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மும்பை தாக்குதல், பதன்கோட், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். இவனை ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்க்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.


இன்று நடைபெறும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு எதிராக பல ஆதாரங்கள் இருப்பதால், அவனை  சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனால் இன்று சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வந்துள்ளன.