இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர்!
வரும் பிப்ரவரி 17-ஆம் நாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இந்தியாவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வரும் பிப்ரவரி 17-ஆம் நாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இந்தியாவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிப்ரவரி 17 அன்று டெல்லிக்கு வரும் ஜஸ்டின் ரூடோ, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்.
கனடா பிரதமரின் இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக்கொள்கை, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து பிப்.,23 வரை கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!