கேரளா வெள்ளத்தால் பலியானவர்களுக்கு கனடா பிரதமர் இரங்கல்!
கேரளா வெள்ளத்தால் பலியானர்களுக்கு தனது ஆழ்ந்து இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்!
கேரளா வெள்ளத்தால் பலியானர்களுக்கு தனது ஆழ்ந்து இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்!
கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 368-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
தற்போது கேரளா மாநிலத்தில் பருவமழை தாக்கம் குறைந்துள்ள நிலையில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளது. எனினும் 10 மாவட்டங்களில் Orange Alert செயல்பாட்டிலேயே உள்ளது.
எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இன்று காலை பாலக்காடு மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் 10 சடலங்களை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரளா வெள்ளத்தால் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்து இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.