கான்பூரில் கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி!
கான்பூரில் கார் மற்றும் மோட்டார் சைக்கில் இடையே ஈற்பட்ட விபத்தில் 3 பேர் பலி.
கான்பூர்: கான்பூரில் இன்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கில் கட்டுப்பாட்டை மீறி இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதையடுத்து, அருகில் இருந்த மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நரேந்திரா, மோகன் மற்றும் சேது ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த விபத்து பற்றி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.