அமித்ஷாவுக்கு எதிரான வழக்கு: பிப்., 13-ம் தேதி ஒத்திவைப்பு!
அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில், மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, பிப்., 13-ம் தேதி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை: சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
2005-ம் ஆண்டு குஜராத்தில் சோராபுதீன் ஷேக் அவரது மனைவி ஆகியோர் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் உள்பட 23 பேர் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து,
சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கினை நீதிபதி ஜே.டி. உத்பட் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில், மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, பிப்., 13-ம் தேதி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.