ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர் டாக்டர் ரஜ்னீஷ் கால்வா. அரசு மருத்துவரான இவர், தனது காரில் நாயை சங்கிலியால் கட்டி சாலையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து, இந்த வீடியோ பலரும் பகிரப்பட்டு, இதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும், விலங்குகள் நல ஆர்வருமான மேனகா காந்தி அளித்த புகாரின் பேரில், ஜோத்பூர் காவல் துறையினர் ரஜ்னீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் அபர்ணா பிசா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜ்னீஷ் கல்வா, அரசு மருத்துவக்கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் உதவி பேராசிரியராகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க | கள்ளக்காதலனுடன் மனைவி; நடுரோட்டில் மடக்கிய கணவன்: வீடியோ வைரல்



மேலும் அவரது ட்வீட்டில்,"இந்த செயலை செய்தவர் மருத்துவர் ரஜ்னீஷ் கல்வா. அந்த நாயின் கால்களில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம், ஜோத்பூரின் சாஸ்திரி நகரில் நடந்தது. இந்த வீடியோவை அனைவரும் பகிர்வதன் மூலம், காவல் துறை அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து, அவரின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார். 


இந்த ட்வீட்டை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நாய்கள் பாதுகாப்பாளர்கள், காயமடைந்த நாயை மீட்டு, சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். மேலும், அவர் காரில் நாயை இழுத்துச்சென்றபோது, அதை தடுக்க வந்தவர்கள் மீது அவர் கார் வைத்து மோத வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த மருத்துவர் ரஜனீஷ் கூறும்போது,"அந்த நாய் அடிக்கடி எனது வீட்டிற்குள் நுழையும். வெளியே துரத்தினால், நீண்டநேரம் குரைத்துக்கொண்டே இருக்கும். அதனால்தான், அந்த நாயை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சென்றேன்" என்றார்.


மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு! வைரலாகும் மோதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ