நேற்று வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-  தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டுள்ளதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் வருகிற 19-ம் தேதி கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருமாநில எல்லை நுழைவு பகுதியை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் கர்நாடக ரக்ஷனா வேதிக் அமைப்பினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மான்டியா ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலை வாசலிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.