உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப்பதிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது காவல்துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபார். 


அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண், அவரது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வந்த கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் அந்த பெண்ணின் தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 


எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது உன்னாவோ பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் உட்பட சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி, கொலை, கொலை முயற்சி மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் தெரியாத 20 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.