ஹைதராபாத்: சைத்தன்ய பாரதி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த முன்னரிவிப்பும் இன்றி மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தியதே இப்போராட்டத்திற்கு காரணமாகும்.


கல்லூரி கட்டணத்தை ரூ.1,13,000 -திலிருந்து ரூ.2,00,000 வரை கல்லூரி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதனால் மாணவர்கள் ரூ.87,000 வழக்கத்திற்கு அதிகமாக செலுத்த வேண்டும் என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காலக்கெடு டிச.,15 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெற வேண்டும் எனவும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்த ஆர்பாட்டத்தில் கிட்டதட்ட 2,000 மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அசாம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கல்லூரி வளாகத்தினுள் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.