CBSE 10th, 12th Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பெறலாம்
சிபிஎஸ்இ 10வது, 12வது முடிவைச் சரிபார்க்க, மாணவர்கள் முதலில் cbse.gov.in, cbresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடிவுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. சிபிஎஸ்இ டெர்ம் 2 தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிட வாரியம் தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படலாம். இருப்பினும், சிபிஎஸ்இ முடிவு தேதியை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. ரிசல்ட் வெளியானதும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு முடிவுகள் டெர்ம் 2 அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in, cbresults.nic.in இல் வெளியிடப்படும்.
சிபிஎஸ்இ இன்னும் அதிகாரப்பூர்வமான தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், முடிவுகள் ஜூலை 2022 இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு 2022ஆம் ஆண்டுக்கான டெர்ம் 2 தேர்வு மே 24ஆம் தேதியும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதியும் முடிவடைந்தது.
மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு 2022 டெர்ம் 2 முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியல்களை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in மற்றும் results.gov.in ஆகியவற்றிலிருந்து பார்க்கலாம். அதேபோல் இந்த தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் மற்றும் உமங் ஆப்ஸ் மூலமும் சரிபார்க்க முடியும்.
சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு 2022 டெர்ம் 2 முடிவுகள் 2022: அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து மதிப்பெண்களைப் பதிவிறக்குவது எப்படி?
* மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவைச் சரிபார்க்க, முதலில் cbseresults.nic.in மற்றும் results.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* இதில் 'சிபிஎஸ்இ டெர்ம் 2 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் சிபிஎஸ்இ டெர்ம் 2 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022'க்கான இணைப்பு இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் காணப்படும்.
* இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் தோன்றும். இங்கே நீங்கள் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* இப்போது சிபிஎஸ்இ டெர்ம் 2 மதிப்பெண் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் உங்கள் முன் தோன்றும்.
சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 – டிஜிலாக்கரில் எவ்வாறு சரிபார்க்கலாம்
* உங்கள் முடிவைச் சரிபார்க்க, மாணவர்கள் digilocker.gov.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் பார்வையிடவும்.
* இப்போது ஆதார் எண் போன்ற கோரப்பட்ட விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
* அந்த முகப்புப் பக்கத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கிளிக் செய்யவும்.
* பின்னர் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான டெர்ம் 2 ஆம் முடிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் தாள் உங்கள் முன் திரையில் தோன்றும்.
* இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.
சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 – சிபிஎஸ்இ முடிவை எப்படி எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது
* முதலில் உங்கள் போனின் மெசேஜ் பாக்ஸுக்குச் செல்லவும். அதில் சிபிஎஸ்இ 10 என டைப் செய்து உங்கள் ரோல் எண்ணை ஸ்பேஸ் கொடுத்து டைப் செய்யவும். இப்போது இந்த செய்தியை 7738299899 க்கு அனுப்பவும். உங்கள் ரிசல்டை மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.
மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR