CBSE 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது வருகின்றன? சமீபத்திய செய்தி இதோ
CBSE 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 க்கான முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது.
CBSE Class 10th, 12th Exam 2021 results: CBSE 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 க்கான முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றியுள்ளது. இதனால், மாணவர்களின் காத்திருப்பு இன்னும் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 21 க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இப்போது ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு முடிவுகளை (Exam Results) பள்ளிகள் இறுதி செய்ய வேண்டும் என கல்வி வாரியம் பள்ளுகளுக்கு கூறியுள்ளது. ஜூலை 21 ஆம் தேதி ஈத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆகையால் இன்று தேசிய விடுமுறை நாள் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"ஜூலை 21 அன்று நாடு முழுவதும் ஈத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அதன்படி, ஜூலை 21 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ உடன் இணைந்த அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை இறுதி செய்வதற்கு, கடைசி தேதி ஜூலை 22 ஆகும், "என்று சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை காணும் செயல்முறையை இங்கே காணலாம்:
- cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்குச் செல்லவும்.
- முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ரிசல்ட்’ டேபை கிளிக் செய்யவும்.
- CBSE Exam Results (சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்) என்ற புதிய பக்கத்துக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
- “Secondary School Examination (Class X) 2021” (“மேல்நிலைப் பள்ளி தேர்வு (பத்தாம் வகுப்பு) 2021” )-ல் கிளிக் செய்யவும்.
- சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு ரோல் நம்பர், மைய எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடியை உள்ளிடவும்
- Submit ஆப்ஷனைக் க்ளிக் செயவும்.
- உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு முடிவு திரையில் தோன்றும்.
- இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.
ஜூலை 31 க்குள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் பள்ளிகள் (Schools) இன்னும் முடிவுகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதால், என்று முடிவுகள் வெளியிடப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிபிஎஸ்இ தேர்வுகளின் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
ALSO READ:10, 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இந்த தேதியில் அறிவிக்கப்படும்; cbse.nic.in
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR