CBSE 10, 12 Term 2 Result 2022: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்
CBSE Class 10, 12 Result 2022: மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை cbseresults.nic.in, results.gov.in என்ற இணையதளங்களில் பெறுவார்கள்.
சிபிஎஸ்இ வகுப்பு 10, 12 முடிவுகள் 2022: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு (டெர்ம் 2) தேர்வு முடிவுகளை வெளியிடத் தயாராக உள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இரண்டாம் நிலை முடிவுகள் ஜூலை 4, 2022 அன்று வெளியிடப்படவிருந்தது, அதேசமயம் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் நிலை முடிவுகள் ஜூலை 10, 2022 வெளியிடப்படும் என நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், புதிய அறிக்கைகளின் படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு இரண்டாம் நிலை முடிவுகள் ஜூலை 13 2022 க்குள் அறிவிக்கப்படும் என்றும், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு இரண்டாம் நிலை முடிவுகள் ஜூலை 15, 2022 க்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களை www.cbseresults.nic.in மற்றும் www.results.gov.in ஆகிய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு
சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவுகள் 2022: மதிப்பெண்களைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
www.cbseresults.nic.in
www.results.gov.in
www.digilocker.gov.in
சிபிஎஸ்இ 10 ஆம், 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவுகள் 2022: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மதிப்பெண்களைப் பதிவிறக்குவதற்கான ஸ்டெப்ஸ்
* சிபிஎஸ்இ இன் அதிகாரப்பூர்வ இணையதளம் - cbseresults.nic.in மற்றும் results.gov.in ஐப் பார்வையிடவும்
* முகப்புப் பக்கத்தில் 'சிபிஎஸ்இ டெர்ம் 2 வகுப்பு 12 முடிவுகள் அல்லது சிபிஎஸ்இ டெர்ம் 2 வகுப்பு 10 முடிவுகள் 2022' என்கிற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ரோல் எண்ணை உள்ளிடவும், அதன் பிறகு உங்கள் சிபிஎஸ்இ டெர்ம் 2 முடிவுகள் திரையில் காட்டப்படும்.
* உங்கள் சிபிஎஸ்இ டெர்ம் 2 மதிப்பெண் அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை மற்றும் மார்க்ஷீட்டைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவு 2022: 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர்
2022 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுக்காக 10 ஆம் வகுப்பு படிக்கும் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் காத்திருக்கின்றனர், இது அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in, results.gov.in விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR