மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக, சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற உதவும் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்த மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.


சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்குகளில், இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட்டதை அடுத்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் வேண்டும், இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


இதனையடுத்து, புதிதாக மேலும் 4  தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.


இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற நிலையில் அந்த பதவிக்கான புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 


ஆன்லைன் மூலம் இந்த பதவிக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், விண்ணிப்பித்த 65 பேரில் தகுதி அடிப்படையில் சுதிர் பார்கவா தேர்வு செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன.