நீர்நிலைகளை பாதுகாக்க `ஜல்சக்தி அபியான்` திட்டம் -மத்திய அரசு!
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ` ஜல்சக்தி அபியான்` திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ' ஜல்சக்தி அபியான்' திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிறித்து ஆடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்முலம் இந்தியாவில் 257 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்கள் பதவியில் உள்ளவர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர், தொழிநுட்ப அதிகாரி நியமிக்கப்படுவர். நீர்நிலைகளின் அளவை கண்காணிக்க முப்பரிமாண படம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் திட்டத்தை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.
இதற்காக மத்திய அரசு 255 கூடுதல் மற்றும் இணைச்செயலாளர்களை ஏற்கனவே நியமித்துள்ளது. இவர்கள் வறட்சி மாவட்டங்களுகு பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள பொறியாளர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள், உட்பட பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழுக்கள் சேர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன்' மூலமாக ஜலசக்தி துறையின் செயலகத்தில், இவர்களது பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.