பிலாஸ்பூரில் புதிய AIIMS அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
இமாச்சல பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிராதன் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஸா யோஜனா (பி.எம்.எஸ்.எஸ்.ஐ.) திட்டத்தின் கீழ், இமாச்சல பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் செலவு ரூ .1351 கோடி என மதிப்படப்பட்டுள்ளது!
புதிய AIIMS-ன் முக்கிய அம்சங்கள்:-
இந்த புதிய எய்ட்ஸ் மருத்துவமனையானது 48 மாத கால நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முற்கட்ட பணி 12 மாதங்களுக்கும், கட்டுமான பணிகளுக்கு 30 மாத காலமும், இறுதிகட்ட பணிகளுக்கு 6 மாதங்கள் என அட்டவனைப் படுத்தப்பட்டுள்ளது!
750 படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பரிவு மையங்களை கொண்டவாரு கட்டிடம் வடிமகைப்பட்டுள்ளது!
ஒவ்வொரு வருடமும் 100 எம்.பி.பி.எஸ். மருத்துவர்களை வெளியனுப்பும் வகையில் கல்வி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
அதேப்போல் ஆண்டுக்கு 60 பி.எஸ்.சி. (நர்சிங்) மாணவர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது!
டெல்லி எய்ம்ஸ்-ல் இருப்பது போல் வீட்டு வளாகங்கள் இணைந்த வசதிகள் / சேவைகள், பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது!
மேலும் 15 அறுவைசிகிச்சை நிலையங்கள் உட்பட 20 சிறப்பு / சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு நிலையங்களும் மருத்துவமனையில் இடம்பெருகிறது!
பாரம்பரிய சிகிச்சை முறையினை அளிக்கும் வகையினில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை பிரிவு (ஆயுஷ் பிரிவு) இணைப்பெற்றுள்ளது