புதுடெல்லி: ஆன் - லைன் வர்த்தக தளங்களில் பெரும் தள்ளுபடியுடன் வழங்கப்படும் மோசடி விற்பனைகளை தடைசெய்யவும், இந்த நிறுவனங்களை DPIIT தளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும் முன்மொழியப்பட்ட 2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளை திருத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையத்தில் தேடலின் போது,  பயனர்களை தவறாக வழிநடத்துவதற்கான தடை மற்றும் தலைமை இணக்க அலுவலரை  மற்றும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட வேறு சில திருத்தங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எந்தவொரு சட்டத்தின் கீழும் குற்றங்களை தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரணை ஆகியவற்றை மேற்கொள்ள  அரசு நிறுவனத்திடமிருந்து உத்தரவு கிடைத்த 72 மணி நேரத்திற்குள், ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்க வேண்டும். 


நுகர்வோர் பாதுகாப்பு (ஆன் லைன் வர்த்தகம்) விதிகள், 2020 முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தளத்தில் (DPIIT) ஈ-காமர்ஸ் நிறுவனங்களை பதிவு செய்யவும் மத்திய அரசு (Central Government) திட்டமிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் (ஜூலை 6, 2021 க்குள்) js-ca@nic.in  என்ற மின்னஞ்சலுக்கு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த பரிசீலனைகள் / கருத்துகள் / பரிந்துரைகளை அனுப்பலாம்" என்று நுகர்வோர் விவகார அமைச்சின் இணை செயலாளர் தெரிவித்தார் .


ALSO READ | வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்

ஆன் லைன் வர்த்தகம் (e-commerce) செயல்பாட்டில்  மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் சங்கங்களிலிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக ஒரு தனி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், வழக்கமாக நடத்தப்படும் இ-காமர்ஸ் தள்ளுபடி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று அமைச்சகம் கூறியது. 


குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக  மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது அடிக்கடி ஃபிளாஷ் விற்பனையை மேற்கொள்வது, விலைகளை உயர்த்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது போன்ற நோக்குடன் செய்யப்படும் விற்பனை அனுமதிக்கப்படாது.


தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும், நிறுவனங்கள் சட்டம், இந்திய கூட்டு நிறுவன சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை  DPIIT விதிகளின் கீழ் தனியாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஈ-காமர்ஸ் தளங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.


ALSO READ | விரிவான ஆலோசனைக்கு பின் உருவானது புதிய ஐடி விதிகள்: ஐநாவில் இந்தியா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR