இந்தியா முழுவதும், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கி, தீயாய் தொற்று பாதிப்புகள் பரவி வருகிறது. நாடு முழுவதும், முன்பு எப்போதும் இல்லாத வகையில்,  தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று (Corona Virus) நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளதால், அதை தீர்க்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள் உள்ள மாநிலங்களில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவ ஆக்சிஜன்  தேவையை பூர்த்தி செய்ய, அதன் விநியோகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்m நடைபெற்றது. அக்கூட்டத்தில்,  பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதியிலிருந்து, ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க மத்திய அரசு  முடிவு எடுத்துள்ளது. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை உடனடியாக  வாங்கி, அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு மிக விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.


ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning


ஆக்ஸிஜன் தொடர்பான மாநிலங்களின் தேவைகளை மனதில் கொண்டு,  அவற்றை விரைவில், மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க, ரயில்வே மற்றும் விமானப்படை திறம்பட பயன்படுத்தப்பட்டு, ஆக்ஸிஜன் விநியோகம்  செயல்பட்டு வருகிறது. 


முன்னதாக, ஆக்ஸிஜன் தடையில்லாமல் கிடைக்க செய்யும் முக்கிய முயற்சியாக,  ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பான பொருட்களின் இறக்குமதி மீதான கலால் வரியை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு நீக்கியது. ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு