கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000: மத்திய அரசு
நமது நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3.3 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4.45 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
நமது நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3.3 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4.45 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
தற்போது தொற்று பாதிப்புன் கட்டுக்குள் இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தினசரி பாதிப்புகள் 4 லட்சம் என்ற அளவில் பதிவாகின. கொரோனா உயிரிழப்பும் பல மடங்கு அதிகரித்து.
இந்நிலையில், கொரோனாவினால் (Corona Virus) இறந்தவர்களுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கு ஒன்றில், பிரமான பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக கூறியது.
ALSO READ | அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்
மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து (SDRF) கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ .50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ICMR வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, கோவிட் -19 காரணமாக இறந்ததாக வழங்கபப்ட்ட சான்றிதழின் அடிப்படையில், நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் (SDRF) இருந்து இதை மாநில அரசுகள் வழங்கும்.
முன்னதாக, செப்டம்பர் 3-ம் தேதி, கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
கோவிட் -19 காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) உச்ச நீதிமன்றம் ஜூன் 30 தீர்ப்பில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இந்தியாவின் கடும் கண்டனத்தை அடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR