இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதைக்குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
விவசாயம் செய்ய மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக விற்பனை செய்ய முடியாது. பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.