தமிழகத்தில் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு பயன்பாடு அதிகமாக இருப்பதால் மானிய விலை மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்:- தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாடு 89.1% ஆக இருப்பதாகவும் மின் வினியோகம் 100 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரதான் தெரிவித்தார்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்கான மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசிடம் விண்ணப்பித்து சந்தை விலையில் கூடுதலாக பெறலாம் என்ற விதி இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


தமிழகத்திற்கு 2016-17-ம் ஆண்டில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 560 கிலோ லிட்டர் மானிய விலை மண்ணெண்ணை ஒதுக்கப்பட்ட நிலையில் 2017-18-ல் அது 2 லட்சத்து 4 ஆயிரத்து 538 கிலோ லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது.