தன்பாத்: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் (Jharkhand Assembly Elections 2019) பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரமர் மோடி, குடியுரிமை திருத்த மசோதா காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் குறித்து பேசினார். அப்பொழுது அவர், காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியும் வடகிழக்கு மாநிலத்தில் போராட்டம் நடைபெற முக்கிய காரணமாக உள்ளனர். அவர்கள் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். உங்கள் ஊழியரான இந்த மோடியை நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் வடகிழக்கு மாநிலங்களை, குறிப்பாக அசாமின் சகோதர சகோதரிகளிடம் அங்குள்ள இளம் சகாக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பேரணியில் மேலும் பேசிய அவர், அரசியல் காரணங்களுக்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியும் வடகிழக்கு மாநிலத்தில் தீ வைக்க முயற்சிக்கின்றன. பங்களாதேஷில் இருந்து ஏராளமான மக்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்ற குழப்பம் அங்கு பரவி வருகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த குடியுரிமை திருத்த மசோதா சட்டம் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகளின் குடியுரிமைக்கானது. 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் அதிகரித்தபோது, ​​டஜன் கணக்கான கிறிஸ்தவ குடும்பங்களும் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்தன. அவர்களின் மூதாதையர்களும் இந்த பூமியுடன் இணைந்திருந்ததால் அவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த மக்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு, காங்கிரஸ் அரசு அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. 


பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் பல தசாப்தங்களாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களை அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்களுக்கு குடியுரிமை குறித்த வாக்குறுதிகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதை செய்து காட்டியது பாஜக அரசு தான்.


வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கின் பல்வேறு பிராந்தியங்களின் மரபுகள், அதன் கலாச்சாரம், அந்த இடத்தின் மொழியை மதித்தல், அதைப் பாதுகாத்தல் ஆகியவை தான் பாரதீய ஜனதா கட்சியின் முக்கியமான குறிக்கோளாகும் எனக் கூறினார்.


மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்த வரை, சுதந்திரம் பெற்ற பிறகு, இங்குள்ள பழங்குடி சமூகம், பிற்படுத்தப்பட்ட சமூகம் தனி மாநிலம் வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் தனது அரசியல் நலன்களை மட்டும் உயர்வாக வைத்திருந்தது. உங்கள் பேச்சைக் கேட்கவில்லை. ஐந்து தசாப்தங்களாக உங்களுக்காக ஒரு தனி ஜார்க்கண்டை உருவாக்கவில்லை. ஆனால் பாஜக அதை செய்தது.


பாஜக அரசு ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட அனைத்து வேலைகளும், எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், பல தசாப்தங்களாக அதன் மீது முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. இதற்கு காரணம் நீண்ட காலமாக நாட்டை ஆண்ட காங்கிரசுக்கும் அதன் கூட்டாளிகளும் தான் என்றார். 


இன்று, ஒட்டுமொத்த தேசமும் பாஜகவை நம்புகிறது, ஏனெனில் ஒரு தீர்மானத்தை எடுத்த பிறகும் அதை நிரூபிப்பது பாஜக தான். நாட்டு மக்களுக்கு நாம் அளிக்கும் வாக்குறுதிகள் உண்மையாக செயல்படுத்தப்படுகின்றன.


2019 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் (Jharkhand Assembly Elections 2019) மூன்றாம் கட்டத்திற்கான 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதற்கிடையில், பிரதமரும் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) நட்சத்திர பிரச்சாரகருமான நரேந்திர மோடி (Narendra Modi) தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தன்பாத் சென்றடைந்தார். விமான நிலைய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.