ஆந்திர மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் 1200 கோடி இடைக்கால நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15-வது நிதிக்குழுவினருடனான சந்திப்பின் போது அவர், மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உறுதியளித்ததாகவும், ஆனால் 1500 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். 



பிற்படுத்தப்பட்ட பகுதிகள் மேம்பாட்டுக்கு 22 ஆயிரத்து 250 கோடி ரூபாய் நிதி, விமான நிலையங்கள் மற்றும் சாலைகள் மேம்பாட்டுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். இதை தொடர்ந்து, தற்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு, வடகிழக்கு கடற்கரை பகுதியில், ஸ்ரீகாக்குளம் மற்றும் விழிநாகம் மாவட்டங்கள் உட்பட பகுதிகளை சீரமைக்க 1200 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.